கடலோரக்கவிதை 11-15

கடலோரக்கவிதை 11-15

அத்தியாயம்-11

மரியாதாஸும் அருளும் இப்போது நேரடியாக சென்றது போலீஸ் ஸ்டேஷனுக்கு தான்.

அவர்கள் உள்ளே செல்லவும் அவரைத் தெரிந்தவர்கள் வணக்கம் வைக்க, இன்ஸ்பெக்டர் கண்டும் காணாதும் இருந்தார்.

வந்தவரை சிறிது நேரம் வேண்டுமென்றே காக்க வைத்தனர்,அருளுக்குத்தான் கோபம் கோபமாக வந்தது,என்ன ண்ணே இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்து காத்திருக்கணுமா என்று இந்த கோபப்படவும் அவரை மரியதாஸ் தான் அடக்கினார்.

சும்மா இருலே… கேஸ் போட்டிருப்பது நம்ம மவன் மேல, நம்ம மேலான அடிச்சு தூக்கிட்டு போயிடலாம், இப்போ கோபப்பட்டு எதுவும் நடக்கப் போவதில்லை... பிள்ளைங்க இரண்டு பாதுகாப்பா பத்திரமாக இருக்கணும்னா நம்ம பொறுமையா தான் போகணும்,அமைதியாயிரு என்றவர் தன் புத்தியை பயன்படுத்தினார்.

அமைதியாக அங்கு காத்திருந்தார் அதற்குள் அவர்களது வக்கீல் வரவும் மரியதாஸ் எழுந்து நேரடியாக இன்ஸ்பெக்டரிடம் சென்று நின்றவர், வக்கீலை திரும்பிப் பார்க்கவும் வக்கீல் இப்பொழுது பேசினார்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் கையமர்த்தி நிறுத்துங்க பொண்ணோட அப்பா இன்னும் வரல அவர் வந்து என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு அதுக்கு அப்புறம் பார்க்கலாம்.

மரியதாஸ் அப்பொழுது இன்ஸ்பெக்டர் நேரிடையாகவே முறைத்து பார்த்து" என்ன பணம் தந்தால்தான் உன்கிட்ட காரியம் நடக்குமா அப்படி எல்லாம் ஒன்னும் தர முடியாது.

என் பையனும் அந்த பெண்ணும் விரும்பி தான் ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அந்த பொண்ணு வேற மேஜர், யாரும் எதுவும் செய்ய முடியாது சரியா. பொண்ண பெத்தவருக்கும் மனசு வலிக்குமேனுதான் இங்க பேசுறதுக்காக உட்கார்ந்திருக்கேன்.நியாயமா நடந்தா எவன் காலுலயும் விழ வேண்டிய அவசியமில்லை, நம்மள தேடி எல்லாரும் வருவாங்க " என்றார்.

அதற்குள் மரியதாஸ் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதை கேள்விப்பட்டு எம்.எல்.ஏவே நேரடியாக அங்கு வந்து விட்டார்.இன்ஸ்பெக்டருக்கோ இப்போ என்ன செய்யனும் தெரியவில்லை

அதற்குள் சிவசு வந்தவர் மரியதாஸிடம் சென்று ரௌவுடி பிள்ளைய வச்சு என் பொண்ணை கடத்திட்டுபோயிட்டல.அவனை சும்மா விடமாட்டேன் பாரு என்றவர் நேரடியாக இன்ஸ்பெக்டரிடம் சென்று எல்லா தகவலையும் விசாரித்தார். கம்ப்ளைன்ட் கொடுத்து இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் அந்த ரவுடிய அரெஸ்ட் பண்ணலையா என்று கேட்டார்.

அருள் தான் "இங்க பாரு எங்க பையன ரவுடி கிவுடினு சொன்ன நல்லாயிருக்காது பார்த்துக்க,என் மருமகளோட அப்பா அப்படிங்கறதுனாலதான் சும்மா இருக்கும் இல்லைனா கட்டி கடலில் தாழ்த்திருவோம் பாத்துக்கோ"

ஓஓஓ...யாரு பொண்ணு யாரு வீட்டுக்கு மருமக,என் பொண்ணை இப்பவே மீட்டு கொடுங்க சார் என்று சிவசு எகிறினார்.

சிவசுவை அழைத்த எம் எல் ஏ இங்க பாருங்க மரியதாஸ் வீட்டில் வாழ்வதற்கு உங்க பொண்ணு தான் கொடுத்து வச்சிருக்கணும்.பையனும் தங்கமான பையன் தான். சின்னஞ்சிறுசுக ஆசைப்பட்டுட்டாங்க,கல்யாணமும் முடிஞ்சு போச்சுது அப்படியே அவங்களை வாழவிடுங்க.எதுக்கு வீணா பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க.

என் பொண்ணு எங்கனு கேட்டுவிசாரிங்க, நான் பார்க்கணும்,இங்க அழைச்சுட்டு வரச்சொல்லுங்க என்று பிடிவாதம் பிடிக்க…

பிள்ளைங்க இங்க இல்லை,கல்யாணம் முடிச்சுட்டு எங்க போனாங்கனு தெரியலை.வீட்டுக்குப் பயந்து எங்கயாவது ஒளிஞ்சிருப்பாங்க நாங்களும் தேடிட்டுத்தான் இருக்கோம்,கிடைச்சவுடனே இங்க கூட்டிட்டு வர்றோம் என்றார் மரியதாஸ்.

அங்கு எல்லாருக்கும் புரிந்துதான் இருந்தது இப்போது மரியதாஸ் எதோ தில்லாலங்கடி வேலை செய்து விட்டார் என்று. பின்ன அவருக்கு தெரியாமல் அவரது மகன் எங்கே ஒளிந்து இருக்கப் போகிறான்.

சிவசுவின் திட்டமெல்லாம் வீணாகிவிட்டது...இரவு வேளையாகிவிட்டது.அப்படியே ஓய்ந்துபோய் அமர்ந்துவிட்டார்…

இவனுங்க எல்லோரும் மரியதாஸ்க்குத்தான் சப்போர்ட் பண்றாங்க...என் பொண்ணை என்கிட்ட எப்படி வரவைக்கறதுனு எனக்குத் தெரியும்,அப்பாவி பிள்ளைகளை படிக்க வருகிற இடத்துல இப்படித்தான் பண்ணுவீங்களா,நாசாமா போயிடுவீங்கடா நல்லாவே இருக்கமாட்டீங்க என்றவர், கோபத்தில் இன்ஸ்பெக்டரிடம் நான் என் கம்ளையிண்ட வாபஸ் வாங்கிக்கறேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

சிவசுவின் மனமெல்லாம் அவர்களை ஒன்று செய்யமுடிவில்லையே என்று ஆதங்கம், கோபம், என்ன செய்ய,நம்ம பிள்ளைய எப்படி அவன் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றுதான் இன்னும் ஆத்திரம் கூடியது...வீடு வந்தவர் அந்த ஆத்திரம் கோபம் எல்லாவற்றையும் வீட்டிலுள்ள பெண்கள் மேல் காட்டினார்.

இங்கு மரியதாஸோ மெல்ல இன்ஸ்பெக்டரைப் பார்க்க,அவர் சகாயத்தின் ஆள் பணம் கிடைக்கும் இடத்திற்குத்தான் நியாயம் செய்வார்.

உன் பையன் என்கிட்ட மாட்டாமலா போவான் பார்த்துக்கிறேன் என்றவர் அவர்களை போகவிடவும் ,வெளியே நின்றிருந்த எம்.எல்.ஏ விடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பவும்.

அவரோ "அருளு நாளைக்கு வீட்டுக்கு நல்லதா பெருசா மீன் அனுப்பிவிடு மயினிக்கும் பிள்ளைங்களுக்கும்" என்றார் 

"சரி தலைவரே உங்களுக்கு இல்லாததா அனுப்பிடுவோம்,காலையிலயே ட்ரைவரை அனுப்பிவிடுங்க"

இருவரும் கிளம்பி வரவும் வீட்டில் இருந்தவர்களிடம் அங்கே நடந்ததை சொன்னதும் சமாதானமானார்கள்.

அங்க போட்டில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது...எல்லா ஏற்பாட்டையும் தாஸ் செய்திருந்தார் சாப்படு,துணி என்று எல்லாம் இருந்தது.

அதில் தங்குவதற்கான எல்லா வசதிகளும் இருந்தன.இரவு சாப்பாட்டிற்கு பார்சலை எடுத்தவன் சாப்பிட அமரவும்...பயந்து ஒடுங்கி அவனோடு ஒட்டிக்கொண்டிருந்த நித்யாவைப் பார்த்து.அவளது தோளில் கையைப் போட்டு அமர்ந்தவன் பார்சலை பிரிக்க இட்லி சாம்பார் என்று இருந்ததுனஉன் மாமனாருக்கு உன் மேல எவ்வளவு பாசம் பாரு உனக்கு ஏத்த ஐயிட்டமா வாங்கி கொடுத்திருக்காரு சாப்பிட.

நித்யா மெல்ல இதழ் விரிக்கவும் வா சாப்பிடு என்றவன் மெல்ல இட்லியைப் பிய்த்து அவளுக்கு ஊட்டினான்.மைனாகுஞ்சாக வாயைத் திறந்து அவன் ஊட்டுவதை வாங்கினாள்...அவளுக்கு அது பிடித்திருந்தது.

ஒரு ஆண்மகனின் அக்கறை பாசம் எல்லாம் தனக்கென தனியாக கிடைக்கவும் அப்படியே உருகித்தான் போனாள்,இரு இட்லிக்குமேல் சாப்பிட முடியாமல் வேண்டாம் என்றவளை பார்த்து இதுதான் உன் டயட்டா என்று கேட்டு சிரித்தவன்...அவன் உண்ண ஆரம்பித்தான் வேகமாக சாப்பிட்டு முடித்தவன்,போட்டை ஓட்டிக்கொண்டிருந்தவனிடம் சென்று மொபைலை வாங்கியவன் வீட்டிற்கு அழைத்துப் பார்க்க அதில் சிக்னல் இல்லை.

ஒரு தகவல் மட்டும் தன் தங்கைக்கு அனுப்பியிருந்தான்,அங்க நிலவரம் என்னவென்று…

மெல்ல போட்டின் மேல் தளத்திற்கு அவளை அழைத்துவந்தவன்..அங்கே கீழயே அமரவும் அவனதருகில் அமர்ந்தவளை தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

குளிரில் நடுங்கியவளை தனது இருகரம் கொண்டு மூடி தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்.

லட்டு என்று அவளோடு இளைய அவனது அந்த அழைப்பின் வித்தியாசத்தை உணர்ந்து அவனது கண்களை பார்த்தவளுக்கு அடிவயிற்றில் ஏதோ உருள மெல்ல தலையை கவிழ்ந்து கொண்டாள்.

அதுவே அவனுக்கு இன்னும் முன்னேறனும் என்று உணர்த்த,மெல்ல தன் பின்கரம்கொண்டு அவளது முன் கழுத்தை வருட.கைகைளப் பிடித்துக் கொண்டாள்.

மெல்ல தன் பற்கள் தெரிய சிரித்தவன் தனதுமீசையை பிடித்து திருகியவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்கவும்...எழுந்துப் போகப்போனவளை அப்படியே மடக்கி பிடித்தவன்...எங்க ஓடுற லட்டு எங்கயும் போகமுடியாது...எத்தனை நாள் இங்கயிருந்தாலும் நீ என் பிடிக்குள்ளதான் என்றவன்...அலேக்காக அவளை தூக்கி சுற்றியவன் அப்படியே கீழிறக்க தலை சுற்றி அவனது நெஞ்சில் சாய்ந்து நின்றவளை மெதுவாக அணைத்தவன்…

"லட்டு"

"ம்ம்ம்"

"என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்"

தன் இரு கையையும் விரித்து ரொம்ப என்று சொன்னவளை பார்த்து,மயங்கியவன்…

அவள் எதிர்பாராது இதழ்களை சிறை பிடித்துக் கொண்டான்…

அவ்வளவுதான் தேவாவின் உடலெங்கும் அந்த குளிர்ந்த காற்றிலும் அணலாக கொதிக்க ஆரம்பித்தது...இளமை துள்ளி எழுந்தது அவளுடனான அந்த நெருக்கத்தில்.

தேவா மெல்ல அவளது இதழ்களை விடுத்து மனையாளைப் பார்க்க,அவன் கொடுத்த ஒற்றை முத்ததில் கண்கள் கிறங்கி நின்றிருந்தாள்.

அவளது கழுத்தில் கிடந்த அவன்கட்டிய தாலிச்சங்கிலி அவனது உரிமையை கண்முன் காட்டியது.

அந்த இருட்டில் நிலவின் ஒளியில் நித்யாவின் மேனி பால் போல தெரிய,மெல்ல அவளை தன்னோடு சரித்து படுத்துக்கொண்டான்.

அவனது கைகளோ சும்மா இருக்க முடியாமல் நித்யாவின் சேலையின் ஊடாக கோடிழுத்து செல்ல.அது தந்த கூச்சத்தில் நெளிந்தவளின் அங்கமெல்லாம் அவன் மேனியில் பட்டு உருளவும்...அதுகொடுத்த போதையில் அவளது இடுப்பில் முகம் புதைத்து தன் தாடிகொண்டு தேய்த்து விளையாடினான்.

இதுலயே இருவரின் ஹார்மோன்களும் உச்சத்தில் கூத்தாடியது...தேவாவின் கண்கள் மெல்ல ஏறிட்டு மனையாளைப் பார்க்கவும் அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெல்ல அவளின் மேனியில் முன்னேறியவன் அவளது முந்தானையை மறைத்த பாகங்களை காண சேலையை ஒரு கைக் கொண்டு லாவகமாக விளக்கினான்.

அவ்வளவுதான் பயத்தில் தன் கண்களை மூடிக்கொண்டு,தன் கைகளால் முன்னழகை மறைத்துக்கொண்டாள்.

தேவாவிற்குமே இது என்ன மாயமென்றுபிரித்தறியாத உணர்வில் அவளிடம் அதிகமாக நெருங்கினான்.அவளது கைகளை விலக்கியவன் முத்தம் வைத்து முத்தம் வைத்து சொக்கியவன்.

மெல்ல மொத்த சேலையை அவிழ்த்து எடுத்துவிட்டான்.

தேவதை அவளின் அங்கங்கள் கல்லில் கடைந்தெடுத்த சிற்பமாக உருண்டு திரண்டு அவன் முன்னில் இருக்க...தன் இளமையின் விருந்துக்கு தயாரானான் தேவா.

நித்யா என்னும் விருந்தை சுவைப்பதற்கு அவளது உடலில் உள்ள மிச்ச மீதி மறைப்புகளையும் களைவதற்கு,எத்தனிக்கவும் சிறுபெண்ணவளோ மிரண்டு விழிக்கவும்.

கரங்களை மெல்ல விலக்கியவன் அவளை தன்னோடு அணைத்தவன்...அவளது கண்ணோடு கண் நோக்கியவன் 

புருவம் உயர்த்தி ஏன் என்று கேட்கவும்…

பயமாயிருக்கு என்று மென்குரலில் அவளுக்கே கேட்காத வண்ணம் உதடசைக்க…

பயமா என்னைப் பார்த்தா? என அவன் கேட்கவும்…

இல்லையென்று தலையாட்டியவளின் நெற்றியில் மென் முத்தம் வைத்து,அவளதலையைகோதிவிட்டவன்,அவளது காதுமடல்களைப்பிடித்து வருடிவிட்டவனின் உதடுகளும் காதுமடல்களை தீண்ட அதனின் சூடு அவளது உடலில் பரவி ஒரு ஜிவ்வென்ற உணர்வை அவளுக்கு கொடுத்தது.

இதன்பிறகு காத்திருக்க முடியாதவன் அவளின் முன் கழுத்தில் முத்தம் வைத்த்கழுத்தென்னும் சருக்குமரத்தில் வழுக்கிக்கொண்டு கீழ் வந்தவனின் கண்ணில் சட்டையின் கொக்கிகள் மாட்ட அதை ஒவ்வொன்றாக கழட்டவும் பின்னாக சரிந்து சாய்ந்து படுத்து விட்டாள் நித்யா தன் மன்னவனின் செயலுக்கு வசதியாக…

மேலாடையும் அதனுடன் இணைந்துள்ள உள்ளாடையும் மொத்தமாக கழட்டவும் நாணத்தில் அவள் உடல் சிவந்து துடிக்க,அது அவனுக்கு இன்னும் ஆசையைத்தூண்டியது.

தன் உதட்டை கொண்டு மெல்ல அவளது முதுகில் கோலம் போட அப்படியே நிமிர்ந்து படுத்து தன் கணவனைப் பார்க்க மோக வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தான்.

மொத்தமாக தன்னை தொலைத்து அவளை தன்னவளாக மாற்றும் கலையில் மூழ்கியவன்,அவளது செழித்த தேகத்தில் லயித்திருந்தான்.

பார்க்க மட்டுமே சிற்பெண்ணாக தேகத்தில் தன் கணவனை கவரும் கொள்ளை அழகை ஒழித்து வைத்திருந்தாள்.நாக்கின் ஈரத்தால் தன்னவளின் தேகசூட்டினைதணிக்க முயன்றவனின் உதடுகள் அவளது மலர்மேட்டில் முட்டி மோதி தேனெடுக்க முயற்சித்தது...இரு மருங்கிலும் தேனெடுத்தவன் அவளது பாவாடை நாடாவை கழட்ட அது எதிலோ மாட்டிக்கொள்ள அவளது இடுப்பின் போட்டிருந்த தங்கச்செயினில் மாட்டியிருந்தது.

ஹேய் இன்னும் இதெல்லாம் போட்டு இருக்கியா என்று நக்கலாக சிரித்தவனின் பற்கள் அது லாவகமாக நகர்த்தி மொத்த உடையவும் கழற்றிருந்தான்...அவன் கட்டிய தாலியும் இடுப்பின் கொடியும் காலில் கொலுசு மட்டுமே அவளது மேனியில்..

அந்த நிலவொளி மட்டுமே இருவரது ஆடையாக மாறியிருந்தது...கூச்சத்தில் கண்களை இறுக மூடியிருந்தவளின் வயிற்றில் முத்தம் வைத்து அவளது ஒற்றைக் காலை மடக்கியவனுக்கு அவளொரு கடற்கன்னி போல தோன்றினாள்.

லட்டு என்றவனின் மூச்சுக்காற்று அவளது மேனியில் பட்டு அவளது உணர்வுகளை கொந்தளிக்க செய்தது.மெல்ல அவளாக அவனது முடியடர்ந்த நெஞ்சில் முத்தம் வைக்கவும் அவளது பின்னங்கழுத்தோடு கைகைளக் கோர்த்து அவளது கிழுதட்டை கடித்து இழுத்து தனது வாய்க்குள் கடத்தியவனின், கைகள் இப்போது அவளது மேனியில் உலாவரவும் மெல்ல மெல்ல அவளது தொடைகளில் கடித்து வைத்தான்.

மூங்கில் போன்ற கால்களுக்கிடையில் தன் முரட்டு கால்களை நுழைத்து இறுகப் பற்றிக் கொண்டவன்,மெல்ல அவளது கண்களைப் பார்க்க கண்கள் என்னும் சோழியை இப்பவும் உருட்டி அவனை ஆட்டுவித்தாள் நித்யா தேவாவை…

அவளது கண்களின் பாவனைக்கு ஏற்றவாறு அவளுள் உயிர் தேடி,மகரந்த தேன் உண்ணும் வண்டாக நித்யாவின் தேகக்கூட்டில் நுழையவும்...மொத்த உலகமும் அவளுக்குள் ஒரு நொடி நின்று,அதனால் வேகமாக மூச்சை உள்ளிழுத்தாள்.

கொண்டவனின் உயிர் தன்னுள் செய்கின்ற மாயத்தை உணர்ந்து அவனுக்கு வழிவிட,மொத்த உயிரையும் அவளுள் கடத்தும் முயற்சியில் வேகமாக செயல்பட,அது தாளாத பெண்மையோ துடித்து வெடித்து தன் நகங்களால் அவனது தோள்களிலும் முதுகிலும் வீரத்தழும்புகளை பரிசாக கொடுத்தாள்.

முற்றும் துறந்த நிலையில் இணையோடு இணைந்து மோகத்தினையும் காதலையும் கொண்டாடி மகிழ்ந்தனர் இருவரும்...

அத்தியாயம்-12

மெல்ல கண்விழித்துப் பார்த்த நித்யாவிற்கு எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் கண்களால் சுற்றிப் பார்க்க தன் கணவனது நெஞ்சினில் படுத்திருந்தாள்...நல்ல தூக்கத்தில் அவளை தூக்கிக் கொண்டு வந்து கீழே இருக்கும் சிறிய பெட்டில் படுக்க வைத்து, தானும் அதில் படுத்திருந்தான், இடம் சிறியது என்பதால் மனைவியை தூக்கி தன் நெஞ்சில் போட்டிருந்தான்.

மெல்ல எழும்பியவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் பார்த்தது,போட்டினை ஓட்டுபவர் கர்ம சிரத்தையாக எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருக்க,பக்கத்தில் போய் என்னவென்று பார்த்தாள், பால் பவுடர் எடுத்து வைத்திருப்பதை கண்டு, காபி போடப் போகிறார் என்று புரிந்து கொண்டவள்.

அண்ணா தள்ளுங்க நான் போடுறேன் என்றவள் அழகாக காபி போட்டு இரு கப்பில் ஊற்றியவள்,அவருக்கு கொடுத்துவிட்டு தன் கணவனுக்கும் எடுத்துக்கொண்டு நடந்தவள் அவன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல அவனை தட்டி எழுப்பவும்.

உடல் அசதியில் பிரண்டுப் படுத்தவன் அரைக் கண்ணில், அவளைப் பார்த்து அப்படியே சரிந்து படுத்து…புதுப்பொண்டாட்டி கையில என்னவோ? என்று சந்தோஷத்தில் சிரித்துக் கேட்கவும்.

நித்யாவோ "காபி நானே போட்டது"

"வாவ் சூப்பர் கும்போகோணம் டிகிரி காபியா மாமி?"என்று வாங்கி குடிக்கவும்.

தன் கண்களை உருட்டி கோபமாக பார்ப்பதாக தன் கணவன் காபி குடிக்கும் அழகை ரசிக்க,அவளைத் தன்பக்கமா இழுத்து அவளுக்கு குடிக்க கொடுக்க.

அவளோ எச்சில் என்க...அவளை முறைத்து பார்த்தவன் தன் வாய் நிறைய காபியை வைத்துக் கொண்டு: அவளை இழுத்து வாயோடு வாய் வைத்து தன் காபியை அவளது வாயில் கடத்தினான்.

இப்பொழுது மெல்ல அவளை விடுவித்தவன்; அவளது உதடு வழியாக வழிந்த சிறு துளி காபியைத் மெல்ல தன் நாக்கினை நீட்டி தொட்டு எடுத்து சுவைத்தவன்.

இதுதான்டா சூப்பர் காபி என் பொண்டாட்டி என்று எழுந்தவனின், உடலில் ஒன்றுமில்லை என்றதும் தன் கண்களை இறுக மூடியவளினை தன் மேனியில் சாய்த்து,அடுத்து தேவா நித்யாவின் உடலில் தன் உதட்டினால் கவிதை எழுத தொடங்கியவன், பின் தன் உடலாலும் அவளிடம் கவிதை எழுதி தன் காதலை நிரூபிக்க தொடங்கியிருந்தான்.

காலையில் அவர்களுக்கு இருவரின் முத்தங்களும் இதழ்களின் பரிமாற்றங்களுமே உணவாகவே மாறியிருந்தது.

கூடலின் இனிமை முடிந்து மறுபடியும் தூங்கியெழும்பியவர்களுக்கு அகோர பசியாக இருக்க.இருந்த அரிசி பருப்பில் ரசமும் பருப்பு சம்பந்தியும் வைத்தாள் நித்யா.

நன்கு வகைதொகையாக சாப்பிட்டே பழகிய தேவாவும்,கடலில் இருந்தாலும் ஒரு துண்டு மீனில்லாமல் சாப்பிடமுடியாது முழித்துக்கொண்டிருந்தான்.

நித்யாதான் சாப்பிடத் தொடங்கி அவர்கள் இருவரையும் பார்த்து" ஏன் சாப்பிடாமல் இருக்கீங்க என்று வெள்ளந்தியாக" கேட்டு வைக்க.

"தேவா தம்பி இனி தினமும் இப்படித்தான் சாப்பிடனுமா நீங்க" என்று அவர் பரிதாபமாக தேவாவை பார்த்து கேட்கவும்.

ஆமாம் என்று தலையாட்டியவன் அதை சாப்பிட ஆரம்பித்தான்.

மனைவியின் சமையலை முதன்முறையாக சாப்பிடுகிறான், அந்த ரசமே அவனுக்கு அமிர்தமாக இனித்தது மனைவியை பார்த்துக் கொண்டே அதை சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வேறு எந்த மனித சஞ்சாரமே இல்லாத, அந்த ஆழ்கடலில் தனிமையில் தன் உயிரானவளோடு கூடிக் களித்து இன்புற்றிருந்தான் அதுவே அவனுக்கு சொர்க்கமாக தோன்றியது.

காதலிலும் கூடலிலும் பாலபாடமே தெரியாது இருந்த நித்யாவோ தன் வெட்கம் மறந்து தன் கணவனை தனக்குள்ளாக பொதிந்து வைக்க கற்று கொண்டாள்.

பெண்ணின் உடலை அறியாது இருந்த தேவாவோ; நித்யாவின் உடலில் புதையல் எடுத்து, புதையல் எடுத்து காதல் செய்வது எப்படி என்பதில் பட்டமே வாங்கி விட்டான்.

மூன்று நாள் கழித்து கரைக்கு திரும்பும் பொழுது இருவரும் ஓர் உயிராகவும் இரு உடலுமாக திரும்பி வந்தனர்.

நித்யாவின் முகத்தில் இருந்த அந்த அறியாமை விலகி ஒரு தெளிவு வந்திருந்தது. இவனே! எனக்கு எல்லாம் இவனோடான வாழ்வே! எனக்கு சந்தோஷம் என்ற ஒரு தீர்மானம் அவளது முகத்தில் இருந்த சிறுபிள்ளைதனத்தை நீக்கி தேவாவின் மனைவியாக முற்றிலும் மாறியிருந்தாள்.

தேவாவின் கம்பீரமும் இன்னும் அழகாக கூடியிருந்தது தனக்கு இணையானவள்; தன் உயிரானவள் தன்னோடு இருக்கிறாள் என்ற சந்தோஷமும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் வசப்படுத்தி விடுவேன் என்ற கம்பீரமும் அவனை முழு ஆண்மகனாக காண்பித்தது.

அவர்கள் கரைக்கு திரும்பியதும் ஏக வரவேற்பு... மரிய தாஸை காண்போர் எல்லாம் என்ன தாஸ் அண்ணே! பையனுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு, எங்களுக்கு நீங்க ஒண்ணுமே தரலயே என்று பார்க்கின்ற எல்லாரும் கேட்கவும்.

தனது மகனின் கல்யாணத்தை அந்த ஊருக்கு அறிவிக்கவும்,தன்னை சார்ந்தவர்களுக்கு விருந்து கொடுப்பதற்காகவும் சிறிய வரவேற்பு ஒன்றை வைத்தார்.

தேவாவின் அக்கா இருவரும் இங்கு வந்துவிட, அந்த வீடு நித்யாவிற்காக தலைகீழாக மாறி இருந்தது.இரு மாமியாரும் அவளை அவ்வளவு அன்போடு பார்த்துக்கொண்டனர்.

தன் மகள்களுக்கு எப்படி நகைகள் செய்திருந்தாரோ, அதே போலவே தன் ஒரே மருமகளுக்கும் உடனே செய்துவிட்டார் மரியதாஸ்.

வீட்டினுள்ளே உள்ள சமயலைறையை நித்யாவிற்கென்று சமையல் சமைக்க மாற்றிவிட்டனர்.அவர்களுக்கு வீட்டின் பின்புறம் சமயலறை மாற்றிவிட்டனர்.

அவ்வளவுதான் அந்த வீடே நித்யிவிற்காக மாத்தி அமைத்துவிட்டனர்.வரேவேற்பிற்கு வந்தவர்களைப் பார்த்து நித்யா அரண்டுவிட்டாள்...மொத்த தூத்துக்குடியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் முதல் ரவுடிகள் வரை வந்திருந்தனர்.

தேவாவோ அதே கெத்தோடு இருந்தான்...இன்னும் மீசையை முறுக்கிக்கொண்டான். என்னை எதிர்க்க யாருமில்லை என்று ஆணவம் தலைக்கேறியது.அதுவும் நல்லதுதானே மற்றவர்களை தன்னிடம் நெருங்கவிடாது தனித்துவமாக இருப்பானே.

நித்யாவிற்கோ தன் காதல் கைகூடிவிட்டதென்றும்; தனக்கு அருமையான குடும்பம் கிடைத்திருக்கிறதென்றும்; தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருந்தாள்.

ஆனால் அங்கு சிவசுவோ வீட்டிற்கு தாமதமாக வந்தவர் ஜானகியை அழைத்து எல்லாத்தையும் பேக் பண்ணி வை. நாளைக்கு நம்ம கும்பகோணத்துக்கு போறோம். ஒரு மாசம் லீவு எடுத்து இருக்கேன் அதுக்கப்புறம் ட்ரான்ஸ்பர்க்கு அப்ளை பண்ணியிருக்கேன் என்றவரின் கண்கள் கலங்கியிருந்தது.

என் பொண்ணுக்கு இன்னைக்கு இந்த ஊருல உள்ள அந்த ரவுடிக்கூட வரவேற்பு நடக்குது.ஆஃபிஸ்ல உள்ளவங்க அத்தனை பேரும் கேக்குறாங்க, உங்க பொண்ணு பங்ஷனுக்கு போகலையானு நக்கலா கேக்குறானுங்க.இருக்குடி அவங்களுக்கு நான் யாருன்னு காண்பிக்கிறேன். கும்பகோணத்தில் இருந்து வந்தா, இவனுங்கள ஒன்னும் பண்ண முடியாதுனு நினைச்சுட்டு இருக்காங்களா என்னாலயும் முடியும்னு காண்பிக்கிறேன்:என் பொண்ணை நான் திருப்பி கூட்டிட்டு போகலைனா பாரு நான் சிவசு இல்லை,ஆண்பிள்ளை இல்லை என்று கறுவியவர் ஜானகியும் திவ்யாவையும் அழைத்துக்கொண்டு கும்பகோணத்திற்கு அன்றே பஸ் ஏறி விட்டார்.

தேவா நித்யா வரவேற்பு முடிந்து அவர்களது வாழ்க்கை தெளிவாக போய்க்கொண்டிருந்தது.எந்தவித இடையூறுமில்லாமல்.

அவர்களது படிப்பில் அதில் கவனம் வைத்து நல்லபடியாக பரீட்சை எழுதி முடித்தனர்.

அன்பு மட்டுமே தேவா வீட்டில் பிரதானமாக இருந்தது, அன்பானவர்களுக்கு என்றுமே துரோகம் இழைக்க அவர்களுக்குத் தெரியாது. எதிரியாக இருந்தாலும் எதிர்த்து நின்று சண்டை இடுவார்களேத் தவிர,முதுகில் குத்த தெரியாதவர்கள்.

பழகினால் தன் சாப்பாட்டில் கூட பாதியை பகிர்ந்து நமக்குத் தருபவர்கள், மொத்தத்தில் அன்பிற்கு கட்டுபடுவர்கள் துரோகத்தின் நிழல் கூட அவர்களிடம் இருக்காது.

கடல்தான் அவர்களுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கும் பொக்கிஷம்… அதுபோலதான் எல்லையற்ற அன்பு எனும் பொக்கிஷத்தை வாரி வழங்குபவர்கள் அவர்கள்.

அந்த வீட்டில்தான் நித்யா அன்பின் அரிச்சுவடியை மொத்தமாக அறிந்து கொண்டாள். தாயன்பு மட்டுமே அவளுக்கு சொந்தமாக இருந்தது. இப்பொழுது மரியதாஸ் ரெஜினா மூலம் தாயின் அன்பும் தந்தையின் அன்பும் இரண்டும் சேர்த்தே கிடைத்தது.

அளவுக்கு அதிகமாக எது கிடைத்தாலும் அது நிரந்தரமாக நம்மிடம் இருக்க போவதில்லை என்ற வாழ்க்கையின் நியதியின்படி; வஞ்சகமும் துரோகமும் அவர்களுக்கு பின்னாக வந்து கொண்டுதான் இருந்தது.

அதை உணராத நித்யாதான் சிறுபிள்ளையாக இன்னும் மனதிற்குள் இருக்கிறாள் என்பதை நிரூபிக்கும் நாளும் வந்தது... வஞ்சகம் அவளைத் தேடி பின்னாக வந்தது அன்பு என்ற பெயரில் உறுமாற்றிக்கொண்டு.

அதைவிட அருளும் மனைவியும் நித்யாவை தன் பிள்ளையாகவே பாவித்தனர்.

அன்று மெல்ல தேவாவை பார்க்க வந்த வசந்தின் பார்வை வித்தியாசமாக இருக்கவும் ரீனாவுக்கு எதுவோ போல இருந்தது.

இவன் ஏன் இப்படி பார்க்கின்றான் என்று மெல்ல நகர்ந்து வெளியே சென்று மொட்டை மாடிக்கு செல்ல அவளது பின்னாக சென்ற வசந்த் ரீனா என்று அழைக்கவும்.

என்ன எப்பவும் நெத்திலினுதான கூப்பிடுவ இப்போ என்ன பெயர் சொல்லி கூப்பிடுற.. என்று கொஞ்சம் தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

அவனுக்கும் தன் படிப்பு முடித்து அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும். அதற்குள் ரீனாவிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்திருந்தான்.

அதுவந்து உங்கண்ணன் கொடுத்துவச்சவன் லவ் பண்ணின பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.நான்தான் லவ்வே சொல்ல முடியாம அலைகிறேன் என்று சோக கீதம் வாசிக்கவும்.

ரீனி"சொல்ல வேண்டியதானே அந்த பிள்ளை கிட்ட. சொல்லிட்டு.கல்யாணத்தை பண்ணிட்டு போக வேண்டியதுதானே எதுக்கு இங்க வந்து பேசிட்டு இருக்கீங்க"என்று அலட்சியமாக பேசவும்.

"அப்போ நெத்திலி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்றானே பார்க்கலாம், அதைக்கேட்டு உண்மையிலேயே ஜெர்க் ஆகிவிட்டாள்.

"அப்படியே தன் கண்ணை உருட்டி "என்ன நக்கலாக நீ லவ் பண்ற பொண்ணு கிட்ட பேசுணு சொன்னா என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கார் லூசா நீ" 

"அட ஞானசூனியமே. நீதான் நெத்திலி நான் லவ் பண்ற பொண்ணு"

ஹான் என்று வாயப்பிளந்து நின்றவளை இழுத்து கட்டிக்கொண்டு "ஜட்டி போடுற வயசுல இருந்தே உன்னை நான் இங்க வச்சிருக்கேன்டி என் மாமன் மகளே" என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்டினவன்.

அப்படியே அவளது இதழில் தன் காதலின் பரிசாக ஒரு ஒற்றல் வைக்கவும் அவ்வளவுதான் பயந்து அவனைத் தள்ளிவிடவும் பின்னாடி நித்யா நின்றிருந்தாள்.

அதை எதிர்பார்க்காத வசந்த்தோ திருதிருவென முழித்துக்கொண்டு நின்றிருந்தான்...ரீனாதான் எதுவும் நடக்காததுப்போல வாங்க மயினி என்று அவளோடு சேர்ந்து பேசிக்கொண்டு வசந்த்தை டீலில் விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

ஆனால் நித்யாவோ அதை அப்படியே சென்று தன் கணவன் தேவாவிடம் ஒளிபரப்பிவிட்டாள்.

அதைக்கேட்ட தேவாவிற்கு ஆச்சரியம் இந்த ரெண்டு எப்போதும் முட்டிக்கிட்டு நிக்கும்.. பாரேன் இந்த ரெண்டும் லவ் பண்ணிட்டு இருக்கு நமக்கு தெரியாமலே…

உடனே அவனது தோளில் அடித்து ரீனா பாவம். வசந்த் அண்ணாதான் லவ் பண்றாரு.மாமாகிட்ட சொல்லி பேசிமுடிக்க சொல்லுங்க,ரீனா லவ்வ சொல்லி அவங்க கவ்யாணம் முடியணும்னா அறுபதாம் கல்யாணம்தான் நடக்கும் என்று சிரித்தவளையே வைத்தக் கண் வாங்கமல் பார்த்திருந்தான்.

என்ன சார் பார்வையே சரியில்லையே,நான் இன்னைக்கு லீவு என்று போர்வையை மூடி படுத்தவளின்,போர்வைக்குள்ளாக ஊர்ந்து சென்றான் தேவா...தேவாவா கொக்கா அவனுக்குத் தேவையானதை அவன் பெற்றுக் கொண்டுதான் தூங்கினான்.

அத்தியாயம்-13

கிட்டதட்ட இரண்டு மாதம் முடிந்த நிலையில் வசந்திற்கு கப்பலில் வேலை கிடைக்கவும்,நேரடியாக தேவாவிடம் வந்து கூறினான்.

அவனுக்கு வசந்த் வெளியே வேலைக்குப் போறதுல விருப்பமில்லைதான் ஆனாலும் வாழ்த்துக்கள் சொல்லவும்,முறைத்தவன் "கிணத்துல போட்ட கல்லாட்டம் என் காதல் கிடக்கு அதுக்கு எதாவது வழி பண்ணுங்கலேனு சொல்லவந்தி,வாழ்த்துசொல்ற.

இதைக்கேட்டதும் தேவா பக்கென்று சிரித்துவிட்டான்.டேய் எனகிட்டயே வந்து இதை சொல்ற பார்த்தியா ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்தான்.

வசந்த் "மாப்பிள தைரியமெல்லாம் ரொம்பதான் இருக்கு, என்ன உன் தங்கச்சிய பார்த்தாதான் உதறலெடுக்கே; எங்க வேண்டாம்னு சொல்லிடுவாளோன்னு.அதுதான் பயமியிருக்கு எதாவது வழி சொல்லு மாப்பிள".

தேவா அவனை மேலும் கீழும் பார்த்திட்டு" மச்சான் இந்த லவ் பண்றதுக்கு எல்லாம் நீ செட்டாகமாட்ட,அதுக்கு என் தங்கச்சியும் சம்மதிக்கமாட்டா; பேசாமல் ஒன்னு பண்ணு உங்க சின்ன மாமாகிட்ட போய் மெதுவாக ரீனாவப் பொண்ணு கேளு பிடிச்சிருக்குனு; மீதிய அவரு பார்த்துப்பாரு" என்று ஐடியா கொடுக்கவும்.

வசந்தோ " ஆனாலும் நீ கொடுத்துவச்சவன்டா மாப்ளே,லவ் பண்ணின ஒரே வருஷத்துல கல்யாணம் முடிச்சிட்ட,இனி பிள்ளை ஒன்னு தான் பாக்கி அதையும் சீக்கிரம் ரெடி பண்ணிடுவ போல போற போக்குல" 

"நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டுவரமாட்ட லே" என்றவன்... உனக்காகவே நான் அம்மா கிட்ட பேசறேன், மீதியை நீ பாத்துக்கோ அத்தை கிட்ட சொல்லி என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ அவ்வளவுதான்"என்று தேவா சொல்லவும்.

"சரி ஏதோ எனக்கு உதவி செய்யுற,அதுவரைக்கும் சந்தோஷம் லவ் பண்ணிதான் கல்யாணம் செய்ய முடியல; கல்யாணம் முடிச்சுக்கிட்டாவது லவ் பண்றேன், வேற வழி என்றவனை பார்த்து தேவா சிரிக்கவும்…

என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குதாலே என்று தேவாவை அடிக்க விரட்ட அவன் ஓட…சிறுபிள்ளைகளாக மாப்பிள்ளையும் மச்சானும் சந்தோஷமாக இருந்தனர்.

 அடுத்த நாளே தேவா தனது அம்மாவிடம் வசந்தின் விஷயத்தை தெளிவாக பேசவும். அவருக்கும் இதில் சந்தோஷம்தான் வசந்த் மாதிரி ஒரு பையன் ரீனாவுக்கு கிடைச்சா நல்லதுதானே என்று அன்றே ரெஜினா மரியதாஸிடம் எல்லா விஷயத்தையும் கூறிவிட்டார்.

மரியதாஸிருக்குமே இதில் விருப்பம் தான், தனது அக்காள் மகன் என்றில்லாமல் வசந்த் நல்ல பையன்; அவனது குணங்கள் எல்லாம் தெரியும் அவனே ரீனாவை விரும்பி கேட்கும் போது சம்மதித்தனர்.

 உடனே தனது அக்காளுக்கு தகவல் அனுப்பியவர், எல்லாரும் கூடி பேசி நிச்சயதார்த்த தேதியையும் குறித்துவிட்டனர்.

 நிச்சயதார்த்தம் அன்று வீட்டின் நடுவே தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து சேலையை கட்டி மிதமான ஒப்பனையில் கொலுசொலி கேட்க அங்குமிங்கும் நடமாடும் சித்திரம் போல் இருந்த நித்யாவை பார்த்ததும் தேவாவின் கண்கள் கோலிக்குண்டு போல அவள் பின்னே சென்று சென்று மீண்டது.

எதையோ மறந்து விட்டாள் போல மெல்ல அதை நித்யாவிடம் ரெஜினா கேட்கவும் "ஐயோ மறந்துட்டேன் அத்தை" என்று சொல்லி நகங்கடித்து நின்ற தன் மனையாளை இப்பவே தூக்கிட்டு அறைக்குள் போய் விடுவோமா என்று தான் நினைத்தான்.

அந்த வீட்டின் உரிமைக்காரி அவளை சுற்றி தான் அந்த வீடே இயங்குவது போல தோன்றியது; பிள்ளைகள் எல்லாம் அத்தை அத்தையென்று அவளையே சுற்றிவர;அம்மாவும் சித்தியும் மருமகளே என்று அவளை கேட்க.

அக்காக்கள் இருவரும் இங்கு வந்தாலே தேவாவை மறந்து அவளுக்கென்று எதையாவது வாங்கி வர,பின்ன ரீனாவை சொல்லவே வேண்டாம் அவளுடன் தான் இருப்பாள்.

தேவாவுக்குத்தான் சமயத்தில் மனைவியுடன் பேச முடியாது போகும்...இன்று வேறு ரீனாவின் நிச்சயதார்த்தம்.அவனுக்கும் அதிக வேலை இருக்கவும் மனைவியிடம் நெருங்கமுடியாமல் தவித்தான்.

எல்லோரும் அமர்ந்திருக்க மொத்த குடும்பமும் வந்தாகிவிட்டது. வசந்தின் குடும்பமும் வந்துவிட்டது.அது வேறு யாருமில்லையே மரியதாஸின் அக்காள் மகன்தானே அவன்.உடனே ரீனாவை தயார் செய்து அழைத்து வந்தாள் நித்யா.

வசந்துதான் ரீனாவைப் பார்த்து அப்படியே சிலையாகியிருந்தான்.பின்ன இது என் நெத்திலியா! சேலை கட்டியவுடன் ஆளே அடையாளம் தெரியலையே!.நிச்சயதார்த்தத்திற்கு பதிலா பேசாம கல்யாணத்தையே நேரடியாக வைக்க சொல்லிருந்துருக்கலாமோ என்று யோசித்தான்.

ரீனா எப்போதும் தன்னுடைய அழகு விசயத்தில் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டாள். இப்போது நிச்சயதார்த்தம் என்றதும் அழகு செய்து சேலை கட்டி வந்ததும் வசந்த் மயங்கி விழாத குறைதான்.

நிச்சயம் முடிந்து மொத்த குடும்பமும் தங்கள் தங்கள் ஜோடியோடு போட்டோ எடுத்துக்கொண்டனர்.இப்போதும் ரீனா வசந்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கவவும் கடுப்பானவன் அவளது இடுப்பில் கிள்ளி வைத்துவிட்டான்.

வலியில் துள்ளியவள் ஏன்டா முள்ளி வச்ச என்று கேட்கவும்தான்" அடியே நெத்திலி இன்னைக்கு நம்ம நிச்சயம் முடிஞ்சிருக்கு,இனியாவது மரியாதை தா,அதவிட கொஞ்சம் பாசமா பேசேன்டி.மச்சானுக்கு ஆசையா இருக்கு"

ரீனா சிரித்துவிட்டாள்...மெல்ல இனி பாசமா பேச முயறாசி பண்றேன் என்று தணிந்தவள் வசந்தைப் பார்க்க அங்கே அன்பின் மொட்டு காதலாக லேசாக விரிந்தது.

ஒருவழியாக நிச்சயதார்த்த விழா நன்றாக முடிந்து

இரவு தன்னுடைய அறைக்குள் நுழைந்த நித்யாவை கதவின் பின்பக்கமிருந்து கட்டிப் பிடித்து அலேக்காகத் தூக்கியிருந்தான் தேவா:காலையிலயிருந்து மனுஷன் உன்னை நினைச்சு தவியா தவிச்சுட்டிருந்தேன்.நீ என்னடானா இவ்வளவு லேட்டா வர்றடி என் லட்டு.இருடி உன்னை உதிர்த்து பூந்திகயாக்கிடுதேன் என்று தன் கையிலயே தூக்கி வைத்திருந்தான் அவளை.

ஐய...எல்லோரும் இருக்கும் போது எப்படி இங்க வரமுடியும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா என்று அவனது சட்டையில்லாத தேகத்தில் அவனது நெஞ்சின் முடியை பிடித்து இழுத்து விளையாடி கொண்டே பேசியவளைப் பார்த்தவன்.

வரவர நல்ல பேச கத்துகிட்டேடி,என்று அவளது மூக்கில் செல்ல முத்தம் வைக்கவும் வெட்கி சிவந்தவள்...லேசாக சிரிக்க அவளது இமைகளும் படபடவென்று அவனிடம் பேசியது.கண்களோ அவனது கண்ணோடு கலந்து காதல் பேசியது.

வர வர இரண்டு மாமியாருங்களும் சரியில்லை உனக்கு. மகன் தனியா இருப்பான் போய் கவனினு சொல்றாங்களா பாரு; எப்பவும் அவங்க கூடவே வச்சிக்கிட்டு.இந்த சீரீயலல் வர மாதிரி சண்டைப்போட்டுக்கோங்களேன் எனக்கு ஜாலியா இருக்கும்.

அவனது வாயில் ஒரு அடிப்போட்டவள்" அப்படி எல்லாம் சொல்லாதீங்க,குடும்பம் எப்போதும் அமைதியா சந்தோஷமா இருக்கணும்,கண்ணு வைக்காதீங்க"என்றவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு "நிஜமாவே நீ என் ஸ்வீட் லட்டுக்குட்டி தான்டி...எவ்வளவு ஸ்வீட் நீ"என்றவன்..

மெல்ல குனிந்து அவளது தேனில் ஊறிய பலாப்பழம் போலிருந்த அவளது உதடுகளை தன் உதடு கொண்டு தீண்டவும்,அவனது கைகளிலிருந்து நெளிந்தவள் என்ன பண்றீங்க என்று தனது வாய்குள்ளயே முணுமுணுக்க" "அதுவா என் லட்டுகுட்டி எவ்வளவு இனிப்பா இருக்கானு செக் பண்ணிட்டு இருக்கேன்".

"ச்சீ" என்று தன் கண்களை மூடிக்கொள்ள.

ச்சீயா...அடியே கொன்னு கொன்னு என்றவன்: அவளை இறக்கிவிட்டு நின்றவாகக்கிலயே அவளது முகத்தை தன் கரங்களில் ஏந்தி மெல்ல குனிந்து அவளது மினுமினுக்கும் அந்த ஜாமூன் இதழ்களை தன் வெண்பற்கள் கொண்டு கடித்து இழுத்தவன் அப்படியே ஆரஞ்ச மிட்டாயாக உறிந்திழுத்து சாப்பிட ஆரம்பித்தான்,அவ்வளவு தான் நித்யாவின் மொத்த மென்மையும் அவனிடம் மண்டியிட்டதுப்போல,அவளும் அவனது உயரத்திற்கு எக்கி தேவாவின் தலையின் பின்னோடு தன் கரங்களை கோர்த்து இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

அவனது கரமோ அவளது சேலை மறைக்காத அந்த பால்வண்ண வெண்ணெய் இடுப்பில் விரல்களை இறுகப் பதித்து, தன் இடுப்போடு சேர்த்து இழுத்து கட்டிக்கொண்டது.

அப்படியே தேவாவின் கரங்கள் சேலைக்குள் பயணித்து மெது மெதுவாக மேலேறி தன் பிடிக்கு வாகாக பெண்ணவளின் முன்னங்கங்களை பிடித்துக்கொண்டாது.

அவ்வளவுதான் நித்யா அவனது கரங்களின் அழுத்தம் தாளாது "மச்சான்"...

மெல்ல விடுவித்தவன்"எப்போவும் மச்சான் கூப்பிட சொன்னா. நீ என்னடான்னா இந்த நேரத்துல கூப்பிட்டு இன்னும் என்னை மூடேத்துறடி மாமி என்று அவளை கட்டிலில் தள்ளியவள் அவள் மேலயே படுத்துக்கொண்டான்.

அவ்வளவுதான் நித்யா சத்தமாக சிரிக்க..".எதுக்குடி சிரிக்குற"என சரிந்து படுத்துக்கொண்டு கேட்க.

இல்லை எப்பவும் மூடு ஏறாத மாதிரி,நான் மச்சானு கூப்பிட்டா மட்டும் வர்ற மாதிரியே சொல்றீங்க தான் அதுக்கு சிரிச்சேன்.

சும்மாவே என்னை பார்த்தா உங்களுக்கு அப்படித்தான் ஆகுது என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொல்லவும்,ஆமாடி என் லட்டு குட்டியப் பார்த்தா எனக்கு எல்லா ஃப்லீங்கும் பிச்சுக்கிட்டு வருது...அதுக்கு என்னவாம் என்றவன் மெல்ல ஊர்ந்து சென்று அவளது கன்னத்தில் நறுக்கென்று கடித்து "ஐ லவ் யூடி லட்டுக் குட்டி" என்று கிறங்க,அவளோ அவனது முகத்தை தன் கைகளில் பிடித்து" ஐ லவ் யூ மச்சான்" என்றதும்...தேவாவின் கண்கள் மலர்ந்தது சந்தோஷத்தில், முதன் முறையாக தன் மனையாள் தன் வாயைத் திறந்து அவளது காதலை சொல்லிருக்கின்றாள்,சும்மா விடுவானா அவன் கொண்டாடிடமாட்டானா.

அவளது முகமெல்லாம் உதடு கொண்டு எச்சில் முத்தம் வைத்தவன் மெல்ல இளைப்பாற, இதழைத் திறந்து தன் நாக்கு என்ற போர்வீரனை உள்ளே அனுப்பி நித்யாவின் நாக்கோடு பின்னிப்பிணைந்து அவளது இதழில் ஊறும் தேனமுதை பருகி தன் காதல் தாகத்தை தீர்த்துக்கொண்டான்.

அவளும் கணவனின் ஆசைக்கு தன்னைவிட்டு அவனோடு இசைந்தாள்.

மெல்ல நித்யாவின் வாயிலிருந்து தன் வாயை உறுவியெடுத்தவனின், கண்கள் சொன்ன கதை முற்றிலும் வேறு அது மொழிபெயர்க்க நித்யாவின் கண்களால் மட்டுமே முடியும்,ஆதலால் தன் கண்ணை சுழட்டி தேவாவை அதில் இழுத்துக்கொண்டாள்.

மெல்ல தேவா அவளது சங்கு கழுத்தில் தன் முன்பற்கள் புதிய கடித்து அவளது உணர்வினை தூண்டியவன்,தான் குளிர்காய ஏதுவாக அவளது ஆடைகளை நீக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல தன் உதடுக்கொண்டு கீழிறங்கியவனின் வேகத்தடையாக அவளது இடுப்பு சமவெளி இருக்கவும...அதில் தன் முகம் புதைத்து தன் இதழ் குவித்து முத்தமிட..அவனது உதட்டை விடவும் மீசையும் தாடியும் அவளை அதிகமாக சோதிக்க,கூச்சத்தில் அவனது தலையைப் பிடித்து தள்ளியவளின் கரத்தை தன் கையோடு பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டான்.

மெல்ல சரிந்து படுத்தவளின் தலையிலிருந்த பூ உதிர்ந்து தேவாவின் மேல் விழுந்தது.

அதை எடுத்து முகர்ந்தவன் இதுல நித்யாவோட வாசம் தான் எனக்குத் தெரியுது என்று மயக்கும் புன்னகை வீச...வெட்கம் விட்டு தன் கணவனின் மீதேறி அமர்ந்துகொண்டாள் அவனது முகம் நோக்கி.

சும்மாவே நித்யாவிற்குள் புதைபவன்; அவளாக இடங்கொடுக்கும் போது அதிரிபுதிரிதான் நடத்துவான்.

அவனுக்குத் தடையாக இருக்கும் சேலையை மெது மெதுவாக உருவியவன் அப்படியே நித்யாவின் அங்கங்கள் தெரிய அவன்மேல் அமர்ந்து அவனுக்கு ராஜாபோதை கொடுத்துக்கொண்டிருந்தாள்…

போதை தலைக்கேறி அவளின் மேல் மொத்தமாக பித்தாகி அவளை தன்வெற்றுமார்பில் அவள் அங்கங்கள் பட கட்டியணைத்துக் கொள்ள...தன்னவனோடு மொத்தமாக கலந்து உறவாட தானும் அவனிடம் நெருங்கினாள்.

அவனது தாடியோடு சேர்த்து கன்னங்களை எச்சில் பதிய பதிய கடித்து முத்தம் வைக்க மலர்க்கனிகள் அவன் மீது புரண்டு விளையாட...அதில் விளையாட்டை தொடங்கினான்.

மலர்கனிகள் தன் இளமை பசிக்கென்று உண்ணத் தொட்ஙகியவனுக்கு எதை எடுத்து எதைவிடுக்க என்று திண்டாடியவன்,அவளின் இடுபில் கைக்கொடுத்து தன் வயிற்றிலிருந்தவளை தூக்கி கட்டிலில் கிடத்த எத்தனிக்கையில் அவளது இடுப்பின் கொடி அவன் கையின் வலிமையில் அறுந்து விழுந்தது.

அதைப் பார்த்தவள் ஐயோ எவ்வளவு நாள் இதைப் போட்டிருக்கேன் தெரியுமா.பெரிய பொண்ணானதுக்கு பிறகு போட்டது அத்துட்டீங்க என்று சிணுங்க..இதைவிட நிறைய போட்டு செய்துதாறேன்டி என்று சமாதானம் செய்தவன்…

அதிலயே முத்தம் வைத்து வாழைத் தண்டு கால்களில் தன் கரங்கொண்டு தடவி அதன் வழவழப்பை சோதித்தவன்.கால்களின் ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்து பூஜித்தான்.

வெட்கம் மிகுதியில் நித்யா கண்களை மூடிக்கொள்ள பாதம் தொடங்கி மெல்ல உதடுக்கொண்டு ஒத்தடம் கொடுத்து மேலேறியவன் இடுப்பின் வெற்றிலையில் முத்தம் வைத்து அவளை நிமிர்ந்து பார்க்க,உணர்வின் உச்சாணிக்கொம்பில் அவள் இருக்க,தன் உதடுக் கடித்து அதை சமன்படுத்த தன்னவனின் முடியை இறுகபற்றி வேகமூச்செடுத்துக் கொண்டிருந்தவளின் இடையெனும் இடைப்பட்ட சமவெளியின் உந்திச் சூழியெனும் நீரூற்று தென்பட...இளமையின் மோகத் தீயை அணைக்கும் எண்ணம் தோன்றி அதில் தன் சூடான இளஞ்சிவப்பு நாவுக்கொண்டு தேனென குடிக்க முற்பட்டான்.

அந்தோ! பாவம் தேவா உயிர்குழியில் தன் உயிரைத் தொலைத்து தன் மேனியில் தகிக்கும் தீயை தன் மனையாளுக்கு கடத்தினான்.

மெல்ல அவளது பூவுடலில் நத்தையாக ஊர்ந்து உதடுக்கொண்டு எச்சில் வைத்து அதே உதடுக்கொண்டு துடைத்துவிட்டான்.

இருவரும் உணர்வின் உச்சம் பெற்று,காதலின் உயிர் வேரைத் தீண்டுவதற்கு தயாராகி தங்களது அன்பின் பரிமாற்றத்திற்கு ஆயத்தமானார்கள்.

நித்யா எனும் அல்லி மலரின் இருதண்டு கால்களையும் தன் கட்டுமர கால்களோடு இணைத்து தன் மனையாளின் கண்ணோக்கி உயிர் தேடி தன் உயிரை நுழைத்து,பண்ட பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.

தன் உயிரானவளின் விருப்பபடி வேகமாக இயங்கி கடலோடு கலக்கும் நதியாக மாறி இருவரும் ஒன்றாக கலந்தனர்.

அத்தியாயம்-14

தேவா அடுத்த நாள் காலை எழும்பி பார்க்க தன் மனைவியை அருகில் காணவில்லை.அவளது வீட்டில் பெண்கள் ஐந்து மணிக்கு மேல் படுத்து தூங்குவது இயலாத காரியம். அதில் சிவசு மிகவும் கடுமையாக இருப்பார். சிறுவயதிலிருந்து பிள்ளைகளை பழக்கிவிட்டார் அதுவும் அவரது அக்கா கால் யாராவது என்ன பொம்பள பிள்ளைய இப்படி வளர்த்து வச்சிருக்க, இவ்வளவு நேரம் தூங்குதுன்னு சொல்லிட்டா போதும். அன்று முழுவதும் நரசிம்ம அவதாரத்தில் தான் இருப்பார் சிவசு.

அப்படியே வளர்ந்துவிட்டதால் என்னவோ இங்கயும் அந்த பழக்கம்தான் வந்தது.அதிகாலை எழும்பி துறைமுகத்துக்கு போகின்ற இரு மாமனாருக்கும் காலை காபியை அவள் தான் கொடுத்து பழக்கப்படுத்திவிட்டாள்.

மரியதாஸிற்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு வீட்டுப் பெண்களை காலை நேரத்தில் எழுப்பி தொந்தரவு பண்ணவேமாட்டார்,வெளியவே டீயோ காபியோ குடித்துக் கொள்வார்.

இரவு வெகு நேரம் கழித்து வீட்டிலுள்ள ஆண்களுக்கு எல்லா பணிவிடையும் செய்துவிட்டு தூங்கும் பெண்களை காலையில் எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று விரும்புவார்.அதுவும் அவர் செல்லும் நேரம் அதிகாலை இருட்டுவேளை என்பதால்.

நித்யாவோ காபி போட்டு கொடுத்ததும் "நீ ஏன் இவ்வளவு நேரமே எழுந்து செய்ற,வேண்டாம்மா உனக்கு கஷ்டம்"என்றவரிடம்.

காலையில் வீட்லயிருந்து வெளிய போற ஆம்பளைங்க வெறும் வயித்துல போகக்கூடாது மாமா.எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லும் மருமகளை யாருக்குத்தான் பிடிக்காது.

"நீ சொன்னா சரிதான்மா"என்றவர்களுக்கு,அன்று முதல் இருவருக்கும் காலை காபி நித்யாவின் கையால்தான்.

இப்போது எழும்பிய தேவா"நித்யா" என்றழைக்கவும் மாமியார் நாத்தனாருடன் இருந்தவள் கணவன் அழைத்தும் அவர்களது அறைக்குள் நுழையவும், அவனும் எங்கோ கிளம்பி நிற்க"என்ன நீங்க வெளியே கிளம்புறீங்களா"

"ஆமா அப்பாகூட துறைமுகம் போறேன்,குடும்பம்னு வந்தாச்சு,இனியும் அப்பா சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது தானே" என்று சொன்னவனின் காலின் மேலேறி அப்படியே அவனது இதழோடு இதழ் பொருத்தியிருந்தாள்…

"ஹோய்"என்றவனின் முரட்டு உதடுகள் அவளது வாய்க்குள் இருந்தது.பின்ன தன் மனைவி, குடும்பம் என்று பொருப்புள்ள கணவனை அதிகமாக பிடித்தது.அதனால்தான் அந்த இதழ் முற்றுகை. மெல்ல மனையாளை விடுவித்தவன் அப்படியே அவளது நெற்றியில் முத்தம் வைத்து கிளம்பினான்.

அங்கு சிவசுவிற்கு பணியிட மாற்றம் கிடைக்க காலதாமதமாகியது.அதனால் மறுபடியும் தூத்துக்குடியிலயே இருக்க வேண்டிய சூழல்.

திவ்யாவை கும்பகோணத்திலேயே எஞ்சினியரிங் காலேஜில் படிக்க சேர்த்துவிட்டு, ஹாஸ்டலிலும் சேர்த்துவிட்டு விட்டார். ஏனென்றால் தூத்துக்குடியிலிருந்து எப்போ வேணும்னாலும் கிளம்பலாம்,அதனால் திவ்யாவோட படிப்பு பாதியில் இருக்குமென்பதால் முன்னேற்பாடாக எல்லாம் செய்துவிட்டார்.

ஆனால் மனதில் மட்டும் நித்யா செய்ததும், தேவாவின் குடும்பத்தின் மேல் உள்ள வஞ்சமும் கூடிக்கொண்டே போனது.

அப்படிப்பட்டவருக்கு தன்னுடன் வேலை செய்பவரின் மூலமாக சகாயத்தின் நட்பு கிடைத்தது. ஏற்கனவே தேவாவின் கல்யாணத்தின் போது எல்லா விஷயமும் தெரிந்து கொண்ட சகாயமும், ராபினும் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று கொக்கு போல காத்திருந்தனர்… 

அந்தக் கொக்கின் வாயில் அகப்பட்ட மீனாக சிவசு வசமாக சிக்கிக் கொண்டார். அது அறியாதவர் எப்படியாவது தேவாவிடமிருந்து நித்யாவை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்களை நாடினார்.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கேற்ப மரியதாஸின் எதிரியான சகாயம் சிவசுவின் நண்பனானான்.நண்பன் என்ற போர்வையில் இருக்கும் குள்ளநரி.

மறுபடியும் கல்லூரி திறந்து நித்யாவும் ரீனாவும் கல்லூரி சென்று கொண்டிருந்தனர்.

தேவாவிற்கு நித்யாவை படிக்க அனுப்பணுமா என்று இரண்டு மனதாக இருந்தான். ரெஜினா மூலமாக அதைக் கேள்விப்பட்ட தாஸ்தான் வீட்டின் பெரியவராக" நித்யா எப்படியும் படிப்பை தொடர வேண்டும் என்று முடிவாக கூறிவிட்டார்.படிப்பு பொம்பள பிள்ளைக்கு ரொம்ப முக்கியம் கல்யாணம் ஆயிட்டுனா என்ன படிக்கட்டும், குழந்தை குட்டினு வந்தா ஒன்னுக்கு ரெண்டு பாட்டி இருக்காங்க பாத்துப்பாங்க" என்று தனது முடிவை சொல்லிவிட்டார்.

இதற்கிடையில் வசந்த் கப்பலிற்கு வேலைக்கு சென்றுவிட்டான்,செல்வதற்கு முன்பாக தேவாவிடமும் வந்து கேட்டான்,"உனக்கும் எல்லாம் ஏற்பாடு பண்றேன் மும்பைக்கு வா அங்கதான் உனக்கு,அங்க நிறைய ஏஜெண்டு இருக்காங்க" என்று.

" வேண்டாம் மாப்ள அப்பா, அம்மா,குடும்பம் இந்த துறைமுகம் இதுவே என்னோட உயிரா கலந்துட்டு,இதெல்லாத்தையும் விட என்னோட உயிரா வந்திருக்க நித்யா,மொத்தத்தில் எல்லாரையும் விட்டுட்டு எப்படி நான் கப்பல் வேலைக்கு வர முடியும் சொல்லு. வந்தாலும் என்னால் அங்கு நிம்மதியாக வேலை செய்ய முடியுமா மனசெல்லாம் இங்க இருக்கும், என்னால அங்கெல்லாம் வேலை செய்ய முடியாது மாப்ளே. நீயுமே கல்யாணம் முடிஞ்சதும் இங்கே இருந்துருல, உனக்கு தொழில் ஏற்பாடு பண்ணி தர்றோம்" 

வசந்த்"கல்யாணம் முடியற வரைக்கும் இருக்கேன்,அதுக்கு அப்புறமா பார்த்துக்கலாம் என்றவன்...ரீனாவை தனியாக வெளியே அழைத்து சென்றான்

கடற்கரையில் அவளின் அருகே அமர்ந்தவனிடம் " இந்த தூத்துக்குடி பீச் பாக்குறதுக்கு தான் என்னை கூட்டிட்டு வந்தியா, ஏன்னா இந்த பீச்சை நான் பார்த்ததே இல்ல பாரு" என முறைத்தவளின் மண்டையில் லேசாக கொட்டியவன்.

இதுக்கு முன்னாடி பார்த்ததற்கும் இப்போ மச்சானோட சேர்ந்து பார்க்குறதுக்கும் வித்தியாசம் தெரியலையாடி என் ஆசை நெத்திலி" என்று கேட்டதற்கு.

 

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதே கடலு அதே மண்ணு என்ன வித்தியாசம் தெரியப்போகுது என்று அவனைப் பார்த்து முறைத்தவளின் முகத்தை பற்றியவன்: தன்னை நோக்கி இழுத்து சட்டென்று அவளது அந்த சிவந்த செம்பருத்தி நிற உதடுகளை தன் உதடுக்கொண்டு மூடினான்.

இதை எதிர்பார்க்காத ரீனாவோ தன் கண்கள் விரிய வசந்த்தினை பார்க்க,அவனோ கண்கள் மூடி அவளது இதழின் ஈர முத்தத்தில் தன்னை தொலைத்து கொண்டிருந்தான்.

மெல்ல ரீனாவும் தன் கண்களை மூடி அவனோடான அந்த முதல் நெருக்கத்தையும் முதல் முத்தத்தையும் தனக்குள் வாங்கி கிரகித்து ரசிக்க ஆரம்பித்தாள்.

பின் மெல்ல விடுவித்தவன் நெத்திலி உன்கூட சண்டை போடாம, பேசாம ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி கப்பலுள்ள போயிட்டா எப்படி? என்னன்னு? தெரியாது முதல் தடவை வேற போறேன்.உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்டி என்றவன் அவளது கன்னத்தை தடவிகொண்ட பேச,அவளுக்குத்தான் கூச்சமாக இருந்தது.

மச்சான் கூச்சமா இருக்கு என்று அவனது கையை எடுத்துவிடவும்.

"ஹய்யா நெத்திலி என்ன புதுசா மச்சானு சொல்ற, பாருடா"

ரீனாவோ " இப்படி கேலி பேசினா நான் போயிடுவேன்" என்று எழும்பவும்…

சரி சரி இனி அப்படி பேசல உட்காரு என்று அவளை இழுக்க அவளோ அவனது மேலயே விழ...வசந்துக்கு பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி தேவதைகள் சூழ கனவுல பாட்டு படிக்க போயிட்டான்...பாவம் ரீனாதான் விடுங்க என்று சத்தம்போட்டு அவனை நினைவுலகத்திற்கு கொண்டுவந்தாள்.

இருவரும் தங்கள் காதலை தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உணர்ந்து பகிர்ந்துகொண்டனர்.

இப்போது வசந்த் கப்பலுக்கு சென்று மூன்றுமாதம் முடிந்து வீடு திரும்பினான்.இந்த மூன்று மாதத்தில் அவனால் தேவாவோடு பேசமுடியவில்லை.

அவனிடம் பேசுவதற்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அப்போதெல்லாம் அழைத்தான் ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை.

ரீனாவிற்கு அழைத்தால் ஓரிரு வார்த்தையில் பேச்சை முடித்துவிடுவாள்...தேவாவைப் பற்றிய எந்த தகவலுமே வசந்துக்கு கிடைக்கவில்லை.தன்னுடைய வீட்டிலும் விசாரித்தான் அங்கிருந்தும் அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.என்னவாயிற்று என்றுதான் கவலைப்பட்டான்…

ஒருவேலை நித்யாவுடனான சந்தோஷமான வாழ்க்கையில் நண்பனையே மறந்திட்டானோ என்றுதான் நினைத்திருந்தான்.எப்படியோ நல்லாயிருந்தால் சரிதான் என்று அவனுக்காக பிரார்த்தித்தான்.

அவனுக்குத் தெரியவில்லை தன் உயிர் நண்பனிடம் உயிர் மட்டுந்தான் இருக்கின்றது...அவனது நினைவு, வாழ்க்கை, காதல், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் ஒருத்தி வேரோடு பிடுங்கி சென்றுவிட்டாள் என்று…

மும்பை வந்து அங்கிருந்து தூத்துக்குடி ஏர்போர்ட் வந்தவன்,டேக்ஸியில் வீடு வந்துக்கொண்டிருக்க அவனது காரின் முன்பாக சென்ற ராயல் என்ஃபீல்டினைப் பார்த்தவன் அது தேவா வண்டி என்றதும் சந்தோஷத்தில் காரிலிருந்து ஹார்ன் அடிக்க சொல்ல.

ஹார்ன் அடித்தும் நிறுத்தமல் விலகாது போனவன். திரும்ப திரும்ப ஹார்ன் அடிக்கவும் தன் வண்டியை வசந்த் வந்த காருக்கு முன்பு குறுக்காக தன் வண்டியை நிறுத்தியவன் தள்ளாடியபடியே வந்து உன் வண்டினா உன் இஷ்டத்துக்கு ஹார்ன் அடிப்பியாலே? என்று பக்கத்தில் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து கார் முன் கண்ணாடியில் போட்டு உடைத்துவிட்டான்.

இதைப் பார்த்த வசந்த் அதிர்ந்து என் நண்பன் தேவாவா இது குடிச்சிட்டு கலாட்ட பண்றது...அதுவும் ஆளே அடியோடு மாறியிருந்தான்...தேவதாஸ் மாதிரி தாடி வைத்து கண்கள் சிவந்து முழு குடிகாரனாக மாறியிருந்தான்.

உடனே கீழிறங்கிய வசந்த் ஓடி வந்து மாப்ளே என்னலே இது.இப்படியொரு கோலம் என்று அவனைப் பிடித்திழுத்து பேச.

யாருடா நீ என்னை இழுத்து பிடிக்குற என்று போதையில் அவனையே கேட்கவும்...வசந்திற்கு பைத்தியம் பிடிக்காத குறையாக தலையிலடித்துக் கொண்டவன்" தேவா லேய் நான் வசந்த்துல.என்னலே இது கோலம் இப்படி இருக்க.

நீ நித்யாகூட சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கனு நிம்மதியா இருந்தேன்.இங்க என்னடானா இப்படி வந்து நிக்கிறே டா என்று அவனை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளவும்.

லே யாருல நித்யா அந்த இராட்சஷி ஏன்டா ஞாபகபடுத்துற. அவ நினைப்பே வரக்கூடாதுனு தானேல குடிச்சிட்டு வந்தேன், திரும்பவும் ஏன்டா அவளை பத்தி பேசறே.

என் வாழ்க்கையும் நிம்மதியவும் அழிக்கறதுக்குனு வந்த பேய்லே அவ.என் உயிரை மொத்தமா கொன்னுட்டு அவங்கப்பன் அந்த சொட்டை தலையன் சொன்னதைக் கேட்டு என்னை உயிரோடு கொன்னுட்டு போயிட்டா அவளைப் பத்தி பேசாத.அவளை கொல்லணும் அதுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன் என்றான்.

வசந்திற்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நித்யா தேவாவைவிட்டு பிரிஞ்சு போயிட்டாளா! என்று அதிர்ச்சியிலிருந்தான்…

அத்தியாயம்-15

நல்ல போதையில் இருந்த தேவாவை காரின் பின் சீட்டில் தள்ளி படுக்க வைக்கவும்,என்னை என்னடா பண்ற? ஏற்கனவே வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருக்கேன்.நீ வேற விடுல நான் என் வண்டியில் போறேன்.

நான் தேவாலே மரியதாஸ் பையன் கெத்துல...விடுல என்று காரிலிருந்து இறங்க போனவனை மீண்டும் நல்லவார்த்தை சொல்லி படுக்க வைத்த வசந்த் தேவாவின் வண்டியை அவன் ஓட்டிக்கொண்டு வந்தான்.

தேவாவின் வீடு வந்ததும் கேட்டை திறந்து காரையும் உள்ளே வரச் சொன்னவன், வண்டியை உள்ளே கொண்டு செல்லவும்...கதவை ஓடி வந்து திறந்திருந்தாள் ரீனா,தன் அண்ணனுக்காக எப்போதும் போல காத்திருந்து.

ஆனால் வந்திருந்ததோ வசந்த் :மூன்று மாதம் கழித்து வசந்தை பார்க்கிறோமே என்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தவா?இல்லை தன் அண்ணனை நினைத்து அழவா? என்று எந்த மனநிலையில் அவள் நிற்கிறாள் என அவளுக்கே தெரியாமல் அப்படியே வசந்த்தினைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வாசல் நிலைப்படியில் தன் தலையைசாய்த்து.

வசந்தும் ஒன்றும் சொல்லாமல் காரில் படுத்திருந்த தேவாவை பிடித்து இறக்கி வீட்டினுள்ளே அழைத்து வர,அவனோ என் கைய விடுல எதுக்குல என்னை கைதாங்கலா கூட்டிட்டுப் போற, நான் என்ன நோயாளியா? விடுல நானே நடப்பேன் என்று தள்ளாடியவன் கதவைப்பிடித்து நிற்க...ரீனாவைப் பார்த்து "ரீனாகுட்டி நீ இன்னும் தூங்கல" என்று எப்பவும் போல அவளது தலையை ஆட்டியவன் உள்ளே போய் அப்படியே முன்னறை சோபாவிலயே கவிழ்ந்து படுத்துவிட்டான், அதற்குள் அவர்களது பேச்சு சத்தம் கேட்டு ரெஜினா ஓடிவந்து மகனைப் பார்க்க அதற்குள் நல்ல போதையில் அப்படியே தூங்கிவிட்டான்.

ரெஜினா அவனது தலையை தடவி எப்படியும் ஒன்னு சாப்பிட்டிருக்கமாட்டான் .குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கறானே என்று சத்தமாக அழ ஆரம்பிக்க அந்த சத்தம் கேட்டு, மரியதாஸ் வெளியே வந்தவர் வசந்த் இருப்பதைப் பார்த்து "எப்போ வந்த? எப்படி இருக்க? வந்தவன் நேராக வீட்டுக்கு போகாமல் இங்க என்னலே செய்த"

இல்ல மாமா ஏர்போர்ட்ல இருந்து வர்ற வழியில மச்சானை பார்த்தேன் என்ற வார்த்தைகளே இழுத்தவன். நடந்தவைகளை சொல்லவும்…

"ஓஓஓஓ"என்றவிட்டு இப்போ வீட்டுக்குப் போ. நாளைக்கு காலையில தெளிவா இருந்தா அவன் கிட்ட பேசலாம்… என்று விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

வாசந்த் நிமிர்ந்து ரீனாவை பார்க்கவும் அவனோடு வாசல் வரைக்கும் வந்தவளிடம்...என்னதான்டி நடந்துச்சு இப்படி ஆயிட்டான்,அவனை இப்படி பார்க்க முடியலடி என்று கேட்கவும்.

ரீனா" எங்களுக்கு எதுவும் தெரியாது மச்சான், காலேஜ்ல இருக்கும்போது நித்யாவுக்கு அவங்க அம்மாவுக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சு,அவசரமா பிளட்டு தேவை,அதில்லாம உயிர்பிழைக்க வாய்ப்பில்லை,கடைசியா அவகிட்ட பேசணும்னு நம்ம காலேஜ்ல படிக்கற ஒரு பையன்தான் அவசரமாக வந்து சொன்னான்.

அவங்கம்மாவுக்கு ஆக்ஸிடெண்டுனு சொல்லும்போது எப்படி போகமல் இருக்கமுடியும் அண்ணனுக்கு போன் பண்ணி கேட்டுட்டு அவ அவசரமாக ஆட்டோ பிடிச்சு போனாள். அவ்வளவுதான் தெரியும் அதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியாது. 

அண்ணே அவ வீட்டுக்கு போய் நித்யாவை கூப்பிட்டாங்களாம்.அவ அண்ணேங்கூட வாழவிருப்பம் இல்லைனு சொன்னானு,அவங்க வீட்ல போய் சண்டைப் போட்டு கலாட்டா பண்ணினானு, போலீஸ்ல பிடிச்சு கொடுத்துட்டாங்களாம்,அண்ணனை போலிஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிச்சிருக்காங்க. அப்பாதான் போய் கூட்டிட்டு வந்தாங்க ரொம்ப கலாட்டா பண்ணினான்.

அடுத்த நாளே நித்யா குடும்பம் எங்க போனாங்கனே தெரியாது. கும்பகோணத்துலயும் இல்லை, அப்பா எல்லா இடத்திலும் விசாரிச்சுப் பார்த்துட்டாங்க.

இதைக் கேட்டதும் வசந்த்திற்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நித்யா அப்படி செய்யக் கூடிய பொண்ணுல்லையே. என்னமோ நடந்திருக்கு என்றுதான் யூகித்தான். ஆனால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க முடியவில்லை.

"நித்யாவ நீ தப்பா நினைக்கிறாயா"

தப்பா நினைக்கிறமோ இல்லையோ அது இங்க பிரச்சனை இல்லை. அண்ணே அவ மேல எவ்வளவு நம்பிக்கை வச்சுருந்திருப்பாங்க.அவதான் அவங்க வாழ்க்கைனு நினைத்திருந்த நேரத்தில் விட்டுட்டு போய்ட்டா. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க, இதுல இருந்து இனி எப்படி மீண்டு வருவாங்க?அவங்களால வரமுடியுமா? அண்ணனோட மொத்த வாழ்க்கையையும் அழிச்சிட்டு போயிட்டாளே. இதுக்குதான் எங்க அண்ணனை காதலிச்சாளா? கல்யாணம் பண்ணிக்கிட்டாளா?

என்று கேட்கவும் வசந்த்திடமும் அதற்கு பதிலில்லை.

அடுத்த நாள் காலையில் எழும்பிய தேவா தனதறைக்குள் போகவேயில்லை நித்யா சென்றபின் இரண்டு மாதமும் நல்ல போதையில் இருக்கும்போது மட்டுமே அவனது அறைக்குள் செல்வான் மற்றபடி... எப்பவாது நிதானத்தில் இருந்தால் தங்கள் வீட்டின் கீழறையில் பயன்படுத்திக் கொள்வான்.

காலையில் நிதானத்தில் இருக்கும்பொழுது தேவா சாப்பாட்டு மேஜையில் அமரவும் மரியதாஸ் வந்தவர்.

வாழ்க்கையில எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி நடக்கிறதில்லை. நாம எதிர்பாராதது நடந்தாலும் அதைத் தாண்டி வரக்கூடிய வழியே பார்க்கணும். அந்த குழிக்குள் விழுந்து செத்துகிடக்ககூடாது.

மரியதாஸ் பையானா தேவாவா? அப்படினு கேட்டவனுங்கெல்லாம் அவனா?அப்படினு இளக்காரமா பார்க்குறளவுக்கு இருக்கோம் கொஞ்சம் பார்த்து 

நடக்கசொல்லு உன் பையன என்று தேவா கேட்கவேண்டும் என்பதற்காகவே சத்தமாக ரெஜினாவிடம் பேசினார்.

அதை கேட்டுக்கொண்டிருந்த தேவாவும் கோபத்தில் ரெஜினாவை முறைத்து பார்த்துவிட்டு; சாப்பாட்டு மேசையில் இருந்த தட்டை தூக்கி விசிறி அடித்து விட்டு வெளியே சென்று விட்டான்.

ஒரு நாளும் இப்படி மரியாதை கேடாக அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. இப்பொழுது தான் முற்றிலும் மாறி சாத்தான் உடலில் புகுந்து கொண்டதோ என்று தோன்றும் அளவிற்கு நடந்து கொள்கின்றான்.

கிட்டதட்ட வசந்த் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் தேவாவை பார்த்து பேசமுடியவில்லை. அவனும் எவ்வளவோ முயற்சி செய்கிறான் வசந்திற்க்கு பிடிகொடுக்காமல் தேவா நழுவி விடுகிறான்.

இவனை சரி பண்ணனும்னா ஏதாவது செண்டிமெண்டலாதான் போட்டுத் தாக்கணும் என்று யோசித்தவன், ரீனாவை கல்லூரிக்கு சென்று தனியாக சந்தித்தான்.

ரீனா வசந்தைப் பார்த்ததும் சோபையாக புன்னகைக்க,"எப்படி இருந்தவ இப்படி இருக்காளே"என் பாவமாக பார்த்து நின்றான்.நித்யா என்ற புயல் அவர்களை வேரோடு ஒட்டுமொத்தமாக சாய்த்திருந்தது.அதிலிருந்து மீட்கவேண்டுமே என்றுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான்.

வசந்த்"வெளியே எங்கயாவது போகலாமா"

ரீனா"இல்லை வேண்டாம் நான் லவ் பண்ற மூடுல எல்லாம் இல்லை" என்று கண்ணீர் கண்களில் குளம் போல கட்டி நிற்க சொன்னவளை பார்த்து பாவமாக இருந்தது.

நெத்திலி உன்கிட்ட பேசதான் வந்தேன், ஆனா நான் இப்ப பேசுற மூடுல இல்லை.சரி வா வீட்லயாவது உன்னை கொண்டு விட்டுட்டு போறேன் என்று அழைத்து வீட்டில் கொண்டு விட்டுட்டு சென்றான்.

அடுத்து இரண்டு நாள் கழித்து காலையில் போதை தெளிந்து எழுந்து வந்த தேவாவிடம்"தம்பிலே இன்னைக்காவது வீட்ல இரு.வசந்த் ரீனா கல்யாணம் வைக்கிறதுக்கு அத்தை எல்லாரும் வர்றிங்கலாம், நேத்து ராத்திரியே போன் பண்ணி சொல்லிட்டாங்க"

ரீனாவுக்குமே இந்த தகவல் புதுசு...அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லை. அதுவும் தேவா இப்படி ஒரு நிலையில் இருக்க,வீடும் வீட்டின் நிலமையும் மொத்தமாக தலைகீழாக மாறியிருக்கு,இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு போன நம்மள மாதிரி ஒரு சுயநலவாதி இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது என்று யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

வசந்த் குடும்பத்து பெரியவர்களும் இங்கு மரியதாஸ் அருள்,மற்றும் அக்காள் கணவர்களும் தேவாவும் அமர்ந்திருந்தனர்.

எல்லா பெரியவர்களும் கல்யாணம் எப்போது வைக்கலாம் என்று தியதி பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் வசந்த்திற்கு நாற்பது நாள் மட்டுமே லீவு அதனால்.

திடீரென்று வந்த ரீனா "பெரியவங்க பேச்சு வார்த்தைக்கு இடையில் பேசுவதற்கு மன்னிக்கவும்,எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கறது இஷ்டமில்லை "

எல்லோரும் என்ன இது இந்த பிள்ளை இப்படி வந்து பேசுது என்று பார்த்திருக்க,மரியதாஸ் "ரீனாகுட்டி என்ன இது"என்று சத்தம் போட.

"ப்பா வேண்டாம்பா இப்போ அண்ணன் இருக்க சூழ்நிலையும்,நம்ம வீடு இருக்கின்ற சூழ்நிலையும் எனக்குத் தெரியும்பா. இப்படி ஒரு சூழ்நிலையில் நான் மட்டும் நிம்மதியா கல்யாணம் பண்ணிகிட்டு நான் எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும்,முடியாதுப்பா"என்று அழவும்.

தேவாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை மற்றவர்கள் முன்பாக நாம காட்சிப்பொருளாகிட்டமோ என்று தலைக்குனிந்திருக்க...அதைப் பார்த்த மரியதாஸிற்கு நெஞ்செல்லாம் வலித்தது.

அதற்குள் வசந்த்தின் பெரியப்பா" என்னம்மா இப்படி பேசுற,உங்கண்ணன் குடிச்சுட்டு ஊரெல்லாம் விழுந்துகிடக்கான்,அவன் எப்போ சரியாகி நீ எப்போ கல்யாணம் செய்துப்ப,எங்க வீட்டுப் பையன் அதுவரைக்கும் காத்திருக்கணுமா,உங்க அண்ணன் வாழ்க்கையே இல்லைனு ஆயிட்டுதான" என்று வார்த்தையை விட.

ரீனா "இங்கப்பாருங்க உங்க பையனுக்கு கல்யாணம் பண்றதுக்கு அவசரம்னா நீங்க வேற பொண்ண பார்த்துக்கோங்க" என்று சொன்னவள் வசந்த்தினை கோபத்தில் பார்த்தாள்.

வசந்த் " பெரியப்பா வாங்க எல்லோரும் போகலாம்,இப்போ எதுவும் பேசவேண்டாம்"

வந்திருந்த எல்லோருக்கும் அதிருப்தி தான் ஆனாலும் வசந்த்தின் அம்மாதான்" தம்பி ரீனாகிட்ட பேசிட்டு சொல்லு,கல்யாணக் காரியம் பேச தொடங்கும்போதே தடங்கலாயிருக்கு,இப்போ இந்த பேச்சு வேண்டாம்,கொஞ்சநாள் போகட்டும்"என்றவர்கள் கிளம்பி சென்றுவிட்டனர்.

ரீனாவின் திருமணம் தன்னால்தான் நின்றுவிட்டதோ என்று குற்றவுணர்ச்சியில் இருந்தான் தேவா.மொட்டை மாடியில் படுத்து புகைவிட்டுக் கொண்டிருந்தவனது அருகில் வந்தமர்ந்த வசந்த் அவன் வாயிலிருந்த சிகரெட்டை வாங்கி தான் இழுத்தவன் ஒன்றுமே சொல்லாமல் இருக்கவும்.

தேவா பேசினான் என்னோட காதலைத்தான் ஒருத்தி கொன்னுட்டு போயிட்டா...என்னால ஏன்ல உங்க காதல் சாகணும்.நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க,நான் எங்கயாவது கண்காணத இடத்திற்கு போயிடுறேன் என்னால இந்த வீட்ல யாருக்குமே நிம்மதியில்லை என்றான்.

"இல்லை மச்சான் நீயும் உன் வாழ்க்கையும் சரியானதும் எங்க கல்யாணம் நடக்கட்டும் .எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை"

நான்தான் அவசரப்பட்டுட்டேன்,ஒரு மாயக்காரியின் காதல் வலையில் விழுந்துட்டேன்.இப்போ குடிகாரனா உதாவக்கரையா இருக்கேன்.அப்பாவ தலைகுனிய வச்சுட்டிருக்கேன்...என் மூளைக்கு எல்லாம் புரியுதுல...ஆனா அவளோட வாழ்ந்த வாழ்க்கை மனசுகுள்ள முழுசா இருந்து சாவடிக்குது,தினம் தினம் இங்கயிருந்து என்னை உயிரோட கொல்லுறா மறக்க முடியலைடா என்று தன் நெஞ்சில் குத்திக்கொள்ள...அவனது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

டனே தண்ணியடிப்போம் வர்றியால என்று வசந்த்தினையும் அழைத்துக்கொண்டு பாருக்கு போனான்...மறுபடியும் ராபின் அங்க வந்தவன்.

"லே தேவா என்னலே அந்த நித்யா கல்யாணம் முடிஞ்ச மூணாவது மாசத்துலயே ஓடிப்போயிட்டாளாம்.உன்கிட்ட சரக்கு சரியில்லையோ,வேற தேடிப் போயிட்டா.மீசையிலதான் முறுக்கு போல,உடம்புல இல்லையோ….வேணும்னா சிட்டுகுருவி லேகியம் வாங்கி சாப்பிட்டு இருக்கலாம்"என்று அவனை சீண்ட…

பழைய தேவாவா இருந்திருந்தா இதுக்குள்ள ராபினின் மண்டை உடைஞ்சிருக்கும்:ஆனால் இப்போ இருக்க தேவா மனதின் காயத்தினால் நொந்து போய் இருந்ததால் அதைக்கேட்டு நித்யாவை மறக்க இன்னும் அதிகமாக குடித்தான்.

அவனை வீடுகொண்டு சேர்ப்பதற்குள் ஓய்ந்துபோனான் வசந்த்.அன்றிரவு தனதறைக்குள் சென்றவன் நித்யாவின் கல்யாணப் புடவையை எடுத்து வைத்தவன் அதை தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.

முதல் நாள் நித்யாவை பார்த்தபோது கிடைத்த ப்ரேஸ்லெட்,அன்று கூடலின் போது அறுந்த இடுப்புக்கொடி எல்லாவற்றையும் எடுத்து கையில் வைத்தவனுக்கு அவளோடு வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்து உயிரோடு சதிராடியது...எப்போது தூங்கினான் என்று தெரியாது.

அடுத்தநாள் காலையில் எழுந்து வந்தவன் பார்த்தது தலையில் கட்டோடு அமர்ந்திருந்த மரியதாஸைத்தான்.